தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் படம் 'வர்மா'. இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. 

இந்த படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகைகள் ரைசா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், வர்மா படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சக்திவேலன் வாங்கியுள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சினிமா விரும்பிகள். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

வர்மா படம் மூலம் திரையுலகில் கால் பதிக்கும் நடிகர் துருவ் விக்ரமிற்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.