லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் மற்றும் புதிய கெட்டப் அனைவரையும் ஈர்த்தது. 

Actor Surya Playing Bodyguard Role For Mohan Lol In Kaappan Movie In KVAnand Direction

சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது என்ற செய்தியுடன் வந்தோம். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், காப்பான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று வைசாக்கில் துவங்கியது. இந்த ஷூட்டில் ஆக்ஷன் காட்சிகளை படம் பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி தெரியவந்தது. நான்கு ஐந்து நாட்கள் இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

Actor Surya Playing Bodyguard Role For Mohan Lol In Kaappan Movie In KVAnand Direction

தற்போது மோகன் லால் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வீடியோவில் தோன்றிய சூர்யா, காப்பான் படத்தில் தான் SPG special protection group அதாவது பாடிகார்டாக நடிப்பதாக கூறினார்.