தமிழ் சினிமா கண்டெடுத்த போக்கிஷங்களில் ஒருவர் தான் கிளாஸ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிய துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். 

தற்போது இவர் மறைந்த இரும்பு பெண்மணி மற்றும் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார் என்ற செய்தி நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இதை வெப்சீரிஸாக எடுத்து வருகிறாராம். மேலும் இதன் படப்பிடிப்பு AVM ஸ்டூடியோவில் நடந்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.

மறைந்த மாபெரும் அரசியல் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி எழுதி, கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த செம்மொழி அந்தம் பாடலையும் கௌதம்மேனன் தான் இயக்கினார்.