ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. 

Kousalya Krishnamoorthy The Telugu Remake Of Kanaa Released

இந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது. இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Kousalya Krishnamoorthy The Telugu Remake Of Kanaa Released

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி ஈர்த்து வருகிறது. தமிழில் வெளியான கனா படத்தில் சிவகார்த்திகேயன் வருவது போல் இதிலும் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமாராக வருகிறார்.