மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Vijay Sethupathi Knows Cinematography Revealed By Cinematographer Vijay

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 21-ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Vijay Sethupathi Knows Cinematography Revealed By Cinematographer Vijay

தற்போது படத்தின் சென்சார் U/A என தெரியவந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், விஜய் சேதுபதியுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் சிந்துபாத் குறித்தும் பேசியுள்ளார். அப்போது பேசுகையில், விஜய் சேதுபதிக்கு ஒளிப்பதிவு குறித்தும் தெரிகிறது என்று கூறியுள்ளார்