உலக நாடுகளில் பேட்ட கொண்டாட்டம் ! கைப்பற்றிய பிரபல நிறுவனம் !
By Sakthi Priyan | Galatta | December 17, 2018 12:44 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.
தற்போது இத்திரைப்படத்தை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்ப்ரேஷன் பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தையும் உலகமுழுவதும் இந்நிறுவனம் தான் திரையில் கொண்டு சேர்த்தார்கள் என்பது கூடுதல் தகவல்.