சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தெறித்தது. தல அஜித்தின் இரண்டு கெட்டப்புகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணமுள்ளது. 

வீரம், வேதாளம், விவேகம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் தல அஜித் இணையும் விஸ்வாசம் நான்காவது படமாகும். ஹைதெராபாத் மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடந்தன.மேலும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

Viswasam Movie Cinematographer Vetri Tweeted About The Delta Region Farmers

இதை தொடர்ந்து படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயி மற்றும் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். திரை பிரபலங்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.