ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் LKG. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். ஆரம்பம் முதலே படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் மற்றும் ப்ரோமோக்கள் திரை ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. 

Director Vignesh Shivn Came Up With Valid Comments About LKG Movie And RJ Balaji

இந்நிலையில் நேற்று வெளியான LKG திரைப்படத்திற்கு அனைத்து திசைகளில் இருந்தும் அற்புதமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நகைச்சுவையான படம் என்பதை தாண்டி சீரான கருத்துள்ள படம் என்ற பெருமையையும் பெற்றது.

Director Vignesh Shivn Came Up With Valid Comments About LKG Movie And RJ Balaji

இது குறித்து நம் கலாட்டா குழுவிற்கு விக்னேஷ் சிவன் கூறுகையில், ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே பாலாஜியை தெரியும். நான் பூஜ்ஜியமாக இருந்த நேரத்தில், கடினமான தருணத்தில் உடன் இருந்தவர் பாலாஜி, அவருடைய வெற்றியை, இவ்வளவு பெரிய விஷயத்தை தனியாக நின்று செய்திருப்பது பெருமையை அளிக்கிறது என்று தெரிவித்தார். ஆச்சரியமாக இல்லை அவரது திறமை பற்றி அனைவரும் அறிவர். மிகவும் சந்தோஷமாக உள்ளதாக கூறியிருக்கிறார் விக்கி.