சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தெறித்து வருகிறது.   

வீரம், வேதாளம், விவேகம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் தல அஜித் இணையும் விஸ்வாசம், நான்காவது படமாகும்.   

ஹைதெராபாத் மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

Viswasam Movie Album Is All Set To Ready Announced By Composer DImman

சில நாட்கள் முன்பு, படத்தின் பாடலாசிரியர் விவேகா, இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் இயக்குனர் சிவாவை சந்தித்து விஸ்வாசம் படத்திற்கான மெலடி பாடல் குறித்த சுவையான செய்தியை கூறினர்.   

தற்போது இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில், மதிப்புமிக்க அஜித் சார் உடன் பணிபுரிவது பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றும், விஸ்வாசம் படத்தின் பாடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பதை பதிவிட்டிருக்கிறார்.   

தமிழ் மற்றும் கன்னட படங்களில் பிஸியாக இருக்கும் அவர் ரசிகர்களுடன் இந்த நற்செய்தியை பகிர்ந்துகொண்டார்.