முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார். 

Aadhithya Varma Movie Release Update

அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஆதித்ய வர்மா எனும் அசத்தலான டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசைய்யா இந்த படத்தை இயக்கிவருகிறார். படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Aadhithya Varma Movie Release Update

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இதுகுறித்து நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஷூட்டிங் முடிவடைந்ததென பதிவு செய்துள்ளார்.

Aadhithya Varma Movie Release Update

தற்போது ஜூலை வெளியாகவிருந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரியவந்தது. மேலும் படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் பெயர் தெரியவந்தது. ஆதியாக துருவ்வும், மீராவாக பனிதாவும் நடிக்கின்றனர்.