தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்ட நடிகர் அருண் விஜய்.இவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள திரைப்படம் தடம். தடையற தாக்க படத்தை இயக்கி அருண் விஜய்க்கு என்று ஒரு பெயரை பெற்று தந்த மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.

தன்யா ஹோப் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.வித்யா பிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அருண் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.நடிகர் ஜெயம் ரவி இந்த ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.