தமிழ் திரையுலகின் சின்ன என்.எஸ்.கலைவானர் என்று அழைக்கபடும் நடிகர் விவேக். காமெடி மற்றும் குணச்சித்திர கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் விவேக், நடிப்பை தாண்டி பல சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அபூர்வ ராகங்கள் தருணத்தில் இருந்து தான் ஒரு கமல் ரசிகன் என்றும், சாந்தோம் பள்ளி பருவம் முதல் தற்போது வரை கமல் ரசிகன் என்றும் பதிவு செய்திருக்கிறார். இந்தியன் 2 கதைக்கு தான் தேவைபட்டால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னை நிச்சயம் அணுகுவார் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்தார் நடிகர் விவேக். அட்லீ இயக்கும் தளபதி 63 படத்திலும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஜனங்களின் கலைஞனான விவேக், இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. அதனால் கமல் மற்றும் விவேக் காம்போவிற்கு காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள்.