சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் தான் அடங்க மறு. இப்படத்தின் ட்ரைலர் சில நேரம் முன்பு வெளியாகி இணையத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் கஜராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி படம் என்பதால் நிச்சயம் தரமான கதையம்சம் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தந்தையான இவர் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் ஈர்க்கிறார்.

Petta Director Karthik Subbaraj Father Gajaraj Plays An Important Role In Adangamaru

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படத்திலும் நடிகர் கஜராஜ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.