தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

Dhanush Singing Song For Asuran Movie In GV Prakash Kumar

தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் அசுரன் படத்தின் ஷூட்டிங் 10 அல்லது 15 நாளில் முடிந்துவிடக்கூடும் என்று தெரியவந்தது.

Dhanush Singing Song For Asuran Movie In GV Prakash Kumar

தற்போது படத்தில் தனுஷ் ஓர் பாடலை பாடியுள்ளார் என்ற செய்தி தெரியவந்தது. இப்பாடலின் பெயர் பொல்லாதபூமி என்பதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார்.

Dhanush Singing Song For Asuran Movie In GV Prakash Kumar