தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

Breaking News On Dhanush Vetrimaarans Asuran Audio Update In GV Prakash Musical

நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்ற செய்தியும், தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியாகியது. இதைத்தொடர்ந்து நடிகர் கருணாஸ் மகனும் படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்தன.

Breaking News On Dhanush Vetrimaarans Asuran Audio Update In GV Prakash Musical

கோவில்பட்டியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அசத்தலாக போய்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியது. பின்பு துரைசெந்தில் படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார் தனுஷ். சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடல்கள் நன்றாக வந்திருப்பதாக ட்விட்டரில் பதிவு செய்தார்.

Breaking News On Dhanush Vetrimaarans Asuran Audio Update In GV Prakash Musical

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், மூன்று பாடல்களின் ஆரம்பக்கட்ட பணிகளை துவங்கிவிட்டாராம். விரைவில் மற்ற பாடல்களையும் முடித்துவிட்டு ரசிகர்களின் செவிக்கு விருந்தளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.