அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ராமலிங்கம் இயக்குகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Young Music Sensation Hiphop Thamizha Will be Scoring Music For Jayam Ravi Kajal Agarwal Starrer Untitled Flick

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இளம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Young Music Sensation Hiphop Thamizha Will be Scoring Music For Jayam Ravi Kajal Agarwal Starrer Untitled Flick

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ஹிப்ஹாப் தமிழா இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.STR நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் பாடல்கள் வெற்றியை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.