சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தெறித்து வருகிறது. 

தல அஜித்தின் இரண்டு கெட்டப்புகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணமுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் தல அஜித் இணையும் விஸ்வாசம் நான்காவது படமாகும்.

ஹைதெராபாத் மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Viswasam Movie Actor Mime Gopi Reveals The Original Character Of Thala Ajith In Sets

தற்போது நம் கலாட்டா குழுவிற்கு பேட்டியளித்த மைம் கோபி, தல அஜித் ஒரு மனித கடவுள் என்று புகழ்ந்து கூறியுள்ளார். அவரை போன்ற ஓர் சிறந்த மனிதரை பார்க்கமுடியாது. படப்பிடிப்பு தளத்தில் யாராவது நின்று கொண்டிருந்தால், நாற்காலியை தந்து அமருங்கள் என்று கேட்பாராம்.

எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அனைவரையும் மதிக்கும் தன்மையுடையவர் அஜித் சார். வயது வித்யாசம் பார்க்காமல் லைட்-மேன் முதற்கொண்டு அனைவரையும் அக்கறையோடு விசாரிப்பார் என்றும் கூறியிருக்கிறார்.