தளபதி 63-ல் இணைந்த விஜய்சேதுபதியின் மாணவி ! அசத்தலான அப்டேட்
By Aravind Selvam | Galatta | April 24, 2019 11:45 AM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது இந்த படத்தில் மேலும் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.96 படத்தில் சிறிது நேரமே வந்தாலும் தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் வர்ஷா ஈர்த்திருப்பார்.இதனை அடுத்து இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் விஜயின் கால்பந்து அணியில் ஏற்கனவே இந்துஜா,ரோபோ ஷங்கரின் மகள்,ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோருடன் இவரும் அந்த அணியில் இடம்பெறுவார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று தெரிகிறது.