மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25-ஆம் படமான சீதக்காதி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கெட்டப் என தனக்கென ஒரு பாணியை கடைபிடிக்கும் விஜய் சேதுபதி இப்படத்திலும் 75 வயது முதியவர் வேடத்தில் நடிக்கிறார்.

 

Vijay Sethupathi And Sivakarthikeyan Joined Hands For Promtions Of Seethakadhi Movie

 

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் இயக்குனரான பாலாஜி தரணீதரன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். 96 படத்தில் தனது இசையால் அனைவரது மனதை கட்டி போட்ட கோவிந் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

Vijay Sethupathi And Sivakarthikeyan Joined Hands For Promtions Of Seethakadhi Movie

 

மேலும் ஆயுத பூஜையன்று தனியார் தொலைகாட்சியில் இப்படத்திற்க்கான ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தொலைகாட்சி செட்டில் என்ட்ரியானார் சிவகார்த்திகேயன்.

 

Vijay Sethupathi And Sivakarthikeyan Joined Hands For Promtions Of Seethakadhi Movie

 

ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ் தற்போது விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர் பட்டாளங்கள் கூறிவரும் நிலையில் இருவரும் சேர்ந்து செட்டில் இருந்தவர்களுடன் செல்ஃபி எடுத்த நிகழ்வு திரை விரும்பிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

 

Vijay Sethupathi And Sivakarthikeyan Joined Hands For Promtions Of Seethakadhi Movie