இயக்குனர் பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

Vijay Sethupathi Advices Assistant Directors How To Pitch The Story Towards Artists

இந்நிகழ்வில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த 96 படத்தின் குழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர்.

Vijay Sethupathi Advices Assistant Directors How To Pitch The Story Towards Artists

அப்போது பேசிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள், இங்கு நிறைய உதவி இயக்குனர்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் திரைத்துறை சார்ந்த ஒருவரிடம் கதை சொல்வது மிகவும் முக்கியம். கதை சொல்லும்போது கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் புரியும்படி கதை சொல்ல வேண்டும்.

Vijay Sethupathi Advices Assistant Directors How To Pitch The Story Towards Artists

96 படம் அமைவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பிரேம் அவர்கள் எங்களிடம் கதை சொன்ன விதம் தான். ஒட்டுமொத்த குழுவும் சிறப்பாக அமைந்ததற்கு காரணமும் அவர் கதை சொன்ன விதம் தான்.

Vijay Sethupathi Advices Assistant Directors How To Pitch The Story Towards Artists

அதுமட்டுமல்லாமல் நமக்கு ஒரு விஷயம் கிடைக்கவேண்டுமானால், அதில் மட்டுமே முழு கவனமும் செலுத்த வேண்டும். அப்படி கிடைக்காமல் போனால் அடுத்தவர்கள் மீது பழி போடுவதை தவிர்க்க வேண்டும்.

Vijay Sethupathi Advices Assistant Directors How To Pitch The Story Towards Artists

இதை செக்கச் சிவந்த வானம் படத்தின் போது இயக்குனர் மணி சாரிடம் இந்த பண்பை பார்த்து வியந்தேன் என்று அங்கிருந்த அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தினார். மக்கள் மனம் கவர்ந்த மக்கள் செல்வனின் இச்செயல் பாராட்டிற்குரியதாகும்.