தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

Actor Kathir Reveals About The Role And Release Date Regarding Thalapathy 63 In Atlee Direction

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

Actor Kathir Reveals About The Role And Release Date Regarding Thalapathy 63 In Atlee Direction

சமீபத்தில் படத்தின் இன்ட்ரோ பாடலை சிம்டங்காரன் புகழ் பம்பா பாக்யா பாடியுள்ளார் என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.

Actor Kathir Reveals About The Role And Release Date Regarding Thalapathy 63 In Atlee Direction

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், நடிகர் கதிர் முக்கியமான ரோலில் நடிப்பதாக கல்லூரி விழா மேடையில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற சுவையான செய்தியை கூறிச்சென்றார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.