தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

தற்போது இந்த படத்தில் இந்தியன் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான Jackie Shrrof இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இவர் இதற்கு முன் ஆரண்ய காண்டம்,மாயவன்,கோச்சடையான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

 

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

கோச்சடையான் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக நடித்த இவர் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.இவர் வில்லனாக இருந்தால் தளபதிக்கு இவருக்கும் இடையிலான காட்சிகள் திரையில் வருகையில் அனல் பறக்கும்.

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

 

Superstar Rajinikanth Villain Officially Joins Thalapathy Vijay Starrer Thalapathy 63

எனவே இவர் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டே போகிறது.தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்