வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகணேஷ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். 

படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது இப்படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கும்கி, இவன் வேற மாதிரி, சிகரம் தோடு, அரிமா நம்பி, வீர சிவாஜி, வாகா, நெருப்பு டா, பக்கா, 60 வயது மாநிறம் போன்ற படங்களுக்கு பின்னர் இப்படம் விக்ரம் பிரபு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.