உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு காஜல் அகர்வால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

Ulaganayagan Kamal Haasans Indian 2 Movie Shoot Update Clarified

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.

Ulaganayagan Kamal Haasans Indian 2 Movie Shoot Update Clarified

ஜனவரி 18-ம் தேதி சென்னையில் துவங்கிய இதன் படப்பிடிப்பு சீராக நடந்து வந்தது. இருப்பினும் உலகநாயகன் கமல் ஹாசனுக்கு போடப்பட்ட prosthetics மேக்கப்பால், ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு கேட்டுக்கொண்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் ஷூட்டிங் மீண்டும் துவங்கக்கூடும் என்று நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.

Ulaganayagan Kamal Haasans Indian 2 Movie Shoot Update Clarified