கடந்த 20-ஆம் தேதியன்று த்ரிஷா தனது ட்விட்டர் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டது என பதிவிட்டிருந்தார். சோகத்தில் இருந்த த்ரிஷா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் 21-ஆம் தேதி என்னுடன் உரையாடுங்கள் என்ற கேள்வி-பதில் செக்மென்ட் வைத்து ட்வீட் செய்திருந்தார்.

 

இதையடுத்து அனைத்து த்ரிஷா ரசிகர்களும் சரியாக மாலை 5 மணி அளவில் ட்விட்டரில் ஆஜராகி விட்டார்கள். அனைவரும் தங்களது கேள்விகளை கேட்க துவங்கினர். சற்றும் சலிக்காமல் அனைவரது கேள்விக்கும் அழகாக பதிலளிதார் த்ரிஷா. 

Trisha Interacting With Her Fans In Twitter Which Made Everyone Crazy

பெரும்பாலானோர் 96 படத்தில் வரும் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தை பாராட்டியே ட்வீட் செய்தனர். சிலர் தங்களது ஓவியங்கள், போஸ்டர்களை சமர்ப்பித்து த்ரிஷாவுடன் பேசினர்.

குறிப்பாக ஒருவர் உங்கள் பள்ளி வாழ்க்கையில் யாராவது ராம் இருக்கிறார்களா ? என்ற கேள்விக்கு நான் படித்தது கேர்ள்ஸ் ஸ்கூல் என்று கூலாக பதிலளித்தார்.

அனைவருடன் உரையாடிய பிறகு பேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த புகைபடங்களையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.