2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா. அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா. 

Thalapathy Vijay Biopic Will Be Suitable For ALVijay Featuring Sanjay As Thalapathy In Galatta Awards

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் AL விஜய், ரெட் கார்ப்பெட்டில் பேசுகையில் தளபதி விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால், விஜய்யின் மகன் சஞ்சய் நடித்தால் நல்லா இருக்கும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Thalapathy Vijay Biopic Will Be Suitable For ALVijay Featuring Sanjay As Thalapathy In Galatta Awards

ஏற்கனவே ஜங்ஷன், சிரி என்ற குறும்படங்களில் தனது சீரான நடிப்பை வெளிப்படுத்திய சஞ்சய். தனது தந்தையின் biopic-ல் நாயகனாக நடிப்பாரா என்ற அன்பு நிறைந்த ஆர்வத்தில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். தளபதி போல் நடிக்க நிச்சயம் இளைய தளபதி சஞ்சயால் மட்டுமே முடியும் என்றும் சிலர் உள்ளனர். நாம் எதிர்பார்ப்பது போல் இந்நிகழ்வு நடந்தால் எப்படி இருக்கும். சாதித்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை முழு நீல படமாக எடுப்பது திரைக்கு ஆரோக்கியமே.

Thalapathy Vijay Biopic Will Be Suitable For ALVijay Featuring Sanjay As Thalapathy In Galatta Awards