தமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். அட்லீ இயக்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். தளபதி விஜயின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி தெரிய வந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிக்கும் கைதி படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். 

Thalapathy Sixty Four Director Lokes Kanagarajs Latest Tweet

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களில் முடிக்கப்படுமாம். அதுமட்டுமல்லாமல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்ற சிறப்பு செய்தியும் வெளியானது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தளபதி 64 படத்தை இயக்குனர் சினேகா பிரிட்டோவின் தந்தை B விமல் தயாரிக்கவுள்ளார். ரசிகன், செந்தூர பாண்டி, தேவா போன்ற படங்களை தயாரித்தவர் இந்த படத்தையும் தயாரிக்கவிருக்கிறார்.

Thalapathy Sixty Four Director Lokes Kanagarajs Latest Tweet

தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் மேட்சில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், அதுகுறித்து பதிவு செய்துள்ளார். அதன் கீழ் தளபதி ரசிகர்கள் அனைவரும் 64 படம் பற்றிய அப்டேட்டுகளை கேட்டு வருகின்றனர்.

Thalapathy Sixty Four Director Lokes Kanagarajs Latest Tweet