தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பலரையும் வைத்து படம் இயக்கிவிட்டார். சமீபத்தில் தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து சர்கார் படத்தை இயக்கி அதில் வெற்றியை ருசித்து வருகிறார். 

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது தான்.

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கப்போகிறார். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படம் 2020-ல் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.