தல 59 படத்தை சதுரங்கவேட்டை புகழ் இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் பூஜையை துவங்கினர் தயாரிப்பு நிறுவனம். 

இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தல அஜித்துடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தவர் யுவன். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தல ரசிகர்கள்.

இப்படத்தின் ஆர்ட் டைரக்டராக கதிர் பணியாற்றவிருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. சதுரங்கவேட்டை படம் போலவே தல 59 படத்திலும் இயக்குனர் வினோத் தனது சிறப்பை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thala 59 Movie Shooting Started Today With Pooja Producer Boney Kapoor And Director Vinoth In The Sets