கந்தசாமி, திருட்டுபயலே போன்ற மெகா ஹிட் படங்களை தமிழ் திரை உலகிற்கு தந்தவர் தான் இயக்குனர் சுசிகணேஷ். 

SusiGanesan The Another Name Mentioned In Sexual Harrasment

சமீபமாக பரவி வரும் இந்த மீ டூ மொமென்ட்டில் இவர் பெயர் எழுந்துள்ளதால் அதிர்ச்சியில் உறைந்திருக்கினர் சினிமா வட்டாரங்கள்.

லீனா மணிமேகலை என்ற இளம் இயக்குனர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது கார் கதவை சாற்றிய நிலையில் தன்னை பலவந்தமாக சுசிகணேசன் பாலியல் தொந்தரவளித்தார் என குறிப்பிட்டிருக்கிறார். இச்சம்பவம் 2005-ஆம் ஆண்டு நடந்ததாகவும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார்.

SusiGanesan The Another Name Mentioned In Sexual Harrasment

அதுமட்டுமல்லாமல் தொலைபேசியை தூக்கி எரிந்து வீடு வரை வருமாறும் துன்புறுத்தியதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கதியை பற்றி  சென்னை சேப்பாக்கம் பிரஸ் மீட்டில் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.