இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். 

Suriyas Soorarai Pottru Movie Gets A New Update In Sudha Kongara Direction

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சூர்யா 38 படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணியில் இருப்பதாக சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

Suriyas Soorarai Pottru Movie Gets A New Update In Sudha Kongara Direction

முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது.

Suriyas Soorarai Pottru Movie Gets A New Update In Sudha Kongara Direction

தற்போது பழம்பெரும் நடிகரான மோகன் பாபு சூரரைப்போற்று படத்தில் உள்ளார் என்ற செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்தார் சூர்யா. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சூர்யாவின் கேரக்டரை பாராட்டி பதிவு செய்துள்ளார் மோகன் பாபு.

Suriyas Soorarai Pottru Movie Gets A New Update In Sudha Kongara Direction