லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் 29 நவம்பர் வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. 

ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. 3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டு வெளியான இப்படம் இரண்டாம் நாளான இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் சென்னையில் தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. சென்னையில் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன்மூலம் ரூ.18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த பாகுபலி-2 படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது.