சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் ராட்சசன். இயக்குனர் இராம்குமார் இயக்கிய சைக்கோ-த்ரில்லரான இப்படம் பெரிதளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

SuperStar Rajinikanth Surprises Vishnu Vishal In Phone Call Appreciating Ratsasan Movie

விஷ்ணுவிஷால், அமலாபால் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்தார். போலீஸாக தோன்றும் விஷ்ணுவின் நடிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.

SuperStar Rajinikanth Surprises Vishnu Vishal In Phone Call Appreciating Ratsasan Movie

இச்செய்தியை அடுத்து விஷ்ணுவிஷால் அவர்களுக்கு மற்றொரு பாராட்டும் தொலைபேசி வாயிலாக வந்தது. யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து, ஃபேன்டாஸ்டிக், ஃபேன்டாஸ்டிக், ஃபேன்டாஸ்டிக் நடிப்பு தூள் கெளப்பிட்டிங்க என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் போலீஸ் யூனிஃபார்மில் ஃபிட்டாக இருந்தீர்கள். உங்கள் மற்றும் இயக்குனரின் காம்போ சூப்பர் என்று கூறினார். மேலும் வில்லன் யார் ? அவரது பாடி லாங்குவேஜ் சூப்பர் என்றெல்லாம் விசாரித்த தலைவரின் குரலை கேட்டு இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார் விஷ்ணுவிஷால்.

SuperStar Rajinikanth Surprises Vishnu Vishal In Phone Call Appreciating Ratsasan Movie