தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பலரையும் வைத்து படம் இயக்கிவிட்டார். சமீபத்தில் தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து சர்கார் படத்தை இயக்கி அதில் வெற்றியை ருசித்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

Super Star Rajinikanth To Act In Double Role For ARM Project In Santhosh Sivan Cinematography

இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் நடிகர் யோகி பாபு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கப்போகிறார் என்ற செய்தி கசிந்தது.

Super Star Rajinikanth To Act In Double Role For ARM Project In Santhosh Sivan Cinematography

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. ஏற்கனவே போலீஸ் ரோலில் நடிக்கிறார் என்ற செய்தி பெரிதளவில் வலம் வந்தது. இன்னொரு ரோல் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.