சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. தற்போது இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளான இன்று காலை வெளியானது.

பிறந்தநாள் பரிசாக டீஸரை அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றி கூறி வருகின்றனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள். ரஜினிகாந்த் பாணியில் கூறினால், இது சும்மா டீஸர் தாம்மா, மெயின் பிக்ச்சர் பொங்கலன்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.