ஆர். பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கின்றனர். நடிகர் விமல் நடிப்பில் வெளியான மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. 

கீ, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார் ஜீவா. புகழேந்தி எனும் நான் படத்தில் கவனம் செலுத்துகிறார் நடிகர் அருள் நிதி.

இப்படத்தில் மேலும் யார் யார் இணைகிறார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.