இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது . ஹிப்- ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

பொதுவாக ராஜேஷ் படங்களின் டைட்டில் அனைவரையும் ஈர்க்கும்படி இருக்கும். அதேபோல இந்த படத்திற்கும் பொருத்தமான டைட்டில் வைத்துள்ளார்.மேலும் ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.அவரோடு சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவும் , சதிஷ்,யோகி பாபு போன்றவர்களும் கைகோர்ப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் இன்னும் பல படங்களில் நடித்து நம்மை என்டர்டெயின் செய்யது பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என கலாட்டா நிறுவனம் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.