சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான இன்று பேட்ட படத்தின் டீஸர் இணையத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அல்லாது அனைத்து திரைப்பிரபலங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில் எந்திரன் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எப்போதும் ரஜினிகாந்தின் ரசிகராக இருப்பது பெருமையாக உள்ளது என்றும் பதிவிட்டிருக்கிறார்.