சமீபகாலமாக மீ டூ எனும் நிகழ்வின் மூலம் பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என அனைவரையும் பாலியல் தொந்தரவு செய்த பெரிய மனிதர்களின் உண்மை முகத்திரை என்ன என்பது தெரியவந்தது. 

Sidharth Raises His Voice And Supports Me Too Moment

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஆதாரத்துடன் நிருபித்ததால் இக்கொடிய நிகழ்வை கண்டிக்கும் வகையில் இதற்கு ஆதரவாக பல முக்கிய புள்ளிகள் குரல் எழுப்பி வருகின்றனர். ஊடகங்களிலும், சமூக வலைதலங்களிலும் திரை பிரபலங்கள் பலர் கண்டித்து பதிவிட்டுருக்கின்றனர்.

இதில் குறிப்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் ட்வீட் செய்த பதிவு பெரிதளவில் உணரும் ஒன்றாக அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் பாதிப்பை சந்திக்கின்றனர் என்றும், தவறு செய்தவர்கள் தங்களது ஜாதி பெயர்களை வைத்து தப்பித்து கொள்கின்றனர் என குறிப்பிட்டார்.

இப்படிபட்ட மீ டூ நிகழ்வை தடுக்க நினைப்பவர்கள் தான் இதற்க்கு காரணியாய் விலங்குகள் போல் விளங்குகின்றனர் என எடுத்துரைத்தார். இதற்க்கு சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்படி செய்தால் தான் தவறு செய்தவர்கள் உணர இயலும் என்று கூறினார்.

பெண்கள் மீது கை வைத்தால் தவறா ? ஆம் தவறு தான் என்றும் அவரது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். சமூக அக்கறை கொண்ட சித்தார்த்தின் இச்செயல் பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

Sidharth Raises His Voice And Supports Me Too Moment