SEMA : சிறப்பான வரவேற்பை பெற்றது சிவகார்த்திகேயனின் SK 17 !
By Sakthi Priyan | Galatta | March 21, 2019 11:00 AM IST
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
தற்போது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணைவது இதுவே முதல் முறை. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்ந்து வெற்றி படங்களை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் காப்பான், இந்தியன் 2 போன்ற படங்களை வெளியிடவுள்ளது என்பது கூடுதல் தகவல்.
வரிசையாக படங்கள் நடித்து ஓய்வின்றி உழைக்கும் SK, மேலும் பல சாதனைகள் புரிய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.