சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப்.நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் நாயகி காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.இயக்குனர் பாரதிராஜா, சூரி,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை சீனாவில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் firstlook போஸ்டர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தனர்.இதையடுத்து இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sasikumar Starrer Kennedy Club First Look Poster Released Online Movie Based on Women Kabadi

சசிகுமார் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக இந்த படத்தில் நடித்திருப்பார் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.வெண்ணிலா கபடி குழுவை போல இந்த கென்னடி கிளப் திரைப்படமும் சுசீந்திரனின் புது முயற்சியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.