தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Saalakaara Single Video From Dhanush Hollywood Film Titled Pakkiri In Tamil Released Officially

தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இவர் நடித்த இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து தனது திறமையை ஹாலிவுட் படங்களிலும் காட்ட தயாரானார் தனுஷ்.இவர் நடிப்பில் உருவான எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Saalakaara Single Video From Dhanush Hollywood Film Titled Pakkiri In Tamil Released Officially

ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்திற்கு பக்கிரி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Saalakaara Single Video From Dhanush Hollywood Film Titled Pakkiri In Tamil Released Officially

இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலான சாலக்காரா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்