அறிமுக இயக்குனர் பிரபு இயக்கத்தில் RJ பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகும் படம் LKG. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் கலாய்த்துள்ளனர்.

கவுன்சிலராக இருக்கும் லால்குடி கருப்பையா காந்தி, எப்படி தனது அரசியல் அறிவை பயன்படுத்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் என்பது தான் படத்தின் கதை..

RJ Balaji Priya Anand Starrer LKG Full Movie Review In Tamil Directed by Debutant Prabhu Music Leon James

ஆரம்ப காட்சியிலேயே சத்யராஜ், விஜய் மல்லையா என ஆரம்பித்து சீனுக்கு சீன் தனது கவுண்ட்டர்கள் மூலம்,தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நக்கலடித்து அப்லாசை அள்ளுகிறார் RJ பாலாஜி. இன்னும் எமோஷனல் சீன்களில் சற்று கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.

பல நாட்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பியுள்ள ப்ரியா ஆனந்த், RJ பாலாஜிக்கு பக்கபலமாக இருக்கிறார்.Social Media கொண்டு இயங்கும் இக்கால அரசியல் எப்படியெல்லாம் பங்கு வகிக்க போகிறது என்பதை அருமையாக காண்பித்துள்ளனர் படக்குழு.ப்ரியா ஆனந்துடன் வரும் டூயட் பாடல் படத்திற்கு ஸ்பீடு பிரேக்கராக அமைந்துள்ளது.

RJ Balaji Priya Anand Starrer LKG Full Movie Review In Tamil Directed by Debutant Prabhu Music Leon James

அரசியல் சூறாவளி நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார்.சில காட்சிகளே வந்தாலும் தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.ரித்தீஷ் மூத்த அரசியல்வாதியாக வந்து தனது காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

அறிமுக இயக்குனர் பிரபு தனது முதல் படத்திலேயே நாட்டில் நடக்கும் விஷயங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.அரசியல் படங்கள் என்றால் வழக்கம்போல் இல்லாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் படத்தை கொண்டு சென்றுள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்காவிட்டாலும் பின்னனி இசையால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.விது அய்யன்னாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்த்துள்ளது. 2 மணி நேரத்தில் கச்சிதமாக கட் செய்துள்ள ஆண்டனியின் எடிட்டிங் படத்திற்கு மாபெரும் ப்ளஸ். படம் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் பின்னர் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகி டாப் கியரில் செல்கிறது.

RJ Balaji Priya Anand Starrer LKG Full Movie Review In Tamil Directed by Debutant Prabhu Music Leon James

ஹீரோவாக மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு கதை,திரைக்கதை என அனைத்து டிபார்ட்மெண்டிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் RJ பாலாஜி.

அரசியலில் நாம் எப்போதும் ஓரிரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கிறோம், நல்ல வேட்பாளராக உள்ள சுயேட்சைகளை நாம் கவனிப்பதில்லை என்ற கருத்தினை முன்வைத்து காமெடி கலந்து மக்களுக்கு கொடுத்துள்ளனர் LKG படக்குழுவினர்.

நாம் அனைவரும் ரசிக்கும்படி நமக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளை கோர்த்து ஒரு கதை அமைத்துள்ளனர்.2 மணி நேரம் நண்பர்களுடன்,குடும்பத்தினருடன் ஜாலியாக சிரித்து மகிழ்ந்து இறுதியாக நம்மை சிந்திக்கவும் வைக்கிறது இந்த LKG. சீரான கருத்து சிறப்பான கதையம்சம் உள்ள இப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்ப கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.

கலாட்டா ரேட்டிங் - 2.75/5