சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வரவுள்ளது. அதே நாளில் தான் விஸ்வாசம் படமும் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 

அப்படியிருக்கும் தருணத்தில் இரண்டு படமும் ஒரே நாளில் வருவது கண்டிப்பாக வசூல் பாதிப்பு ஏற்படும் என்பது சினிமா பிரியர்கள் அனைவரும் அறிந்த விஷயமே.

Popular Theatre Reply Tweet By Saying Sure Its Viswasam Movie In Main Screen On Pongal Day

இந்நிலையில் சென்னை ராக்கி திரையரங்கு உரிமையாளரிடம் எந்த படத்தை நீங்கள் திரையிடுவீர்கள் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்க, கண்டிப்பாக தல படம் தான் என பதில் அளித்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் அடுத்த போஸ்டர், பாடல் ஏதாவது வெளிவராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.