சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமய்யா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் அடிச்சு தூக்கு பாடலை நேற்று வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர் தல ரசிகர்கள்.

பிரபல தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் இப்படத்தில் பாடியுள்ளார். கிராமத்து கதையம்சம் உள்ள இப்படத்திற்கு இவரது குரல் ஏற்றவாறு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Super Singer Contestant Senthil Ganesh Croons A Song For Thala Ajith In Viswasam