தமிழ் திரைதுறையில் நடிகர் எனும் அந்தஸ்த்தை தாண்டி நல்ல மனிதர் எனும் பெயரை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். திரை துறை தவிர்த்து கார் மற்றும் பைக் பந்தயம், விமான வடிவமைப்பு, புகைப்படம் எடுப்பது போன்ற தனக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றி மகுடம் சூடுபவர் அஜித். தான் செய்யும் உதவியை எந்த ஒரு விளம்பரம் இன்றி செய்பவர். 

இப்படிபட்ட மனிதனை அரசியல் துறை சார்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் நடந்த மேடை பேச்சில் புகழ்ந்து கூறியுள்ளார். அதில் திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் என பாராட்டி கூறியுள்ளார்.