சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் மற்றும் தீம் இசை 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. எத்தனை பேர் கவனித்தீர்கள், பாடலாசிரியர் கார்த்திக் சுப்பராஜின் பாடல் வரிகளை.

படத்தில் இடம்பெற்றுள்ள Thappad Maara எனும் பாடலை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். சிறந்த இயக்குனராக விளங்குபவர் தனது சிறப்பான வரிகள் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளார். பன்முகத்திறமை கொண்ட கார்த்திக் சுப்பராஜின் இச்செயலை பாராட்டுவதில் பெருமைகொள்கிறது கலாட்டா.