OFFICIAL : தளபதி 63 குறித்த தயாரிப்பாளரின் பதிவு !
By Aravind Selvam | Galatta | March 21, 2019 10:42 AM IST
தளபதி விஜய் நடிப்பில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தற்போது இந்த படத்தின் satellite உரிமையை பெற்றுள்ளது.இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இது ஒரு செம ஜாலியான எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத படமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.