இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் NGK. நந்த கோபால குமரன் இதுதான் NGK. இந்த மூன்றெழுத்து மந்திரமாய் ஜொலித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. ஆர்கானிக் விவசாயம் மீது ஆர்வம் கொண்ட ஒருவர், அடிமட்ட தொண்டனாக அரசியல் பாதையில் குதித்து, பல வகையான அரசியல் புள்ளிகளை சந்தித்து, அவர்களிடம் இருந்து படம் கற்று, பின் அவர்களுக்கே தான் கூற நினைக்கும் பாடத்தை புகுத்தி மக்களிடம் எப்படி சேர்கிறான் என்பது தான் NGK-வின் கதைச்சுருக்கம். 

Director Selvaraghavan Decoding NGK Movie Layer By Layer To His Fans

சூர்யாவை தவிர்த்து வேறு யாரையும் NGK வாக பார்க்க முடியாது. அவ்வளவு அழகாக இயக்குனர் சொல்வதை கேட்டு நடித்திருக்கிறார். பல இடங்களில் சூர்யாவுக்குள் மறைந்திருக்கும் செல்வராகவனை கண்டு களிக்க முடிகிறது. வழக்கமாக செல்வராகவன் பட ஹீரோக்கள் போல் கோபம் கலந்த காந்த பார்வையால் கட்டி ஈர்க்கிறார் NGKவான சூர்யா.

Director Selvaraghavan Decoding NGK Movie Layer By Layer To His Fans

இயக்குனர் செல்வராகவன், படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்து டீகோட் செய்யுமாறு ரசிகர்களுக்கு கூறியிருந்தார். எந்த தருணத்தில் நந்த கோபால குமரன் NGK-வாக மாறுகிறார் ? என்பதற்கு பதிலளிக்க வேண்டியிருந்தார். தற்போது சரியான விடையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Director Selvaraghavan Decoding NGK Movie Layer By Layer To His Fans