தமிழ் திரையுலகிற்கு பல தரமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். 

NGK Movie Distribution Rights For Tamil And Telugu Is Bagged By Weekend Cinemas     

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் என்.ஜி.கே. இயக்குனர் செல்வராகவனுடன் நடிகர் சூர்யா இணைவது இதுவே முதல் முறை. இவ்வருடம் தீபாவளிக்கே வெளிவரவிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.   

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் அரசியலை மைய்யமாக கொண்டுள்ளது என தகவல்கள் நெருங்கிய சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.     

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் தமிழ்,தெலுங்கு விநியோக உரிமையை வீகென்ட் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.